அச்சோ… மழைக்கு நடுவே மாஸ் கெத்து… வண்ணமயமான ரெயின்கோட்… பிஞ்சுப் பாதங்களின் பயணம்… இணையத்தைக் கொள்ளையடிக்கும்… க்யூட்டான குட்டிஸ்…!!

By Swetha on ஆடி 24, 2026

Spread the love

நேபாளத்தின் அழகிய மலைப்பகுதியில் மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்லும் மூன்று சிறு குழந்தைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அனில் புட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோவில், ஈதமான மலைப்பாதையில் மழைக்கு நடுவே இந்தச் சிறு குழந்தைகள் மிகவும் கூலாக நடந்து செல்லும் காட்சிகள் மக்களின் இதயங்களை வென்றுள்ளன.

வீடியோவில் உள்ள குழந்தைகள் இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் பிரகாசமான ரெயின்கோட்களை அணிந்து கொண்டு, ஒருவரையொருவர் கைகளைப் பிடித்தபடி நடந்து செல்கின்றனர். குறிப்பாக, மிகச்சிறிய குழந்தை தனது ரெயின்கோட் பாக்கெட்டில் கைகளை வைத்துக்கொண்டு மிகவும் ‘கூலான கெத்துடன்’ கம்பீரமாக நடந்து செல்லும் பாணி இணையவாசிகளால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.

   

https://www.instagram.com/reel/DbD8zmvN5n9/?utm_source=ig_web_button_share_sheet

   

வீடியோவைப் பதிவுசெய்த நபர் கூப்பிட்டபோதும், அந்தச் சிறு குழந்தைகள் அறியாத ஒரு அந்நிய நபரைப் பொருட்படுத்தாமல், திரும்பிப் பார்க்காமல் தங்களின் பாதையில் தொடர்ந்து சென்றனர். இந்த நவீன காலத்தில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து குழந்தைகள் கடைப்பிடிக்கும் இந்த விழிப்புணர்வும் இடைவெளியும் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.