ஆத்மனாம் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு அருந்திய பிறகு வழங்கப்பட்ட கட்டணப் ரசீதில், ரூ.40 விற்பனை விலை கொண்ட இரண்டு கூல்ட்ரிங்க்ஸ் கேன்களுக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 வசூலிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகக் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதை அந்த வாடிக்கையாளர் கவனித்து, சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.
உணவக சேவை அல்லது கூடுதல் கட்டணம் எதுவும் சேர்க்கப்பட்டிருந்தால், அதனை வாடிக்கையாளருக்கு உணவருந்துவதற்கு முன்பே வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும் எனப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நியாயமான மற்றும் வெளிப்படையான விலையையே வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறி, இந்த கூடுதல் கட்டணம் குறித்து உணவக நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
