BREAKING: அமமுக MLA-வை தகுதிநீக்கம் செய்யக்கோரி மனு…. டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு….!

By Nanthini on ஆடி 24, 2026

Spread the love

அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கோரி, அக்கட்சியின் பொருளாளர் கரிகாலன் சபாநாயகர் J.C.D. பிரபாகரிடம் முறைப்படி மனு ஒன்றை அளித்துள்ளார். கட்சித் தலைமையின் எவ்வித முன்னறிவிப்போ அல்லது உத்தரவோ இன்றி தன்னிச்சையாகச் செயல்பட்டு அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும், TVK கட்சி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகப் பின்னணியில் குதிரை பேரம் நடைபெற்றதாகவும் அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் T.T.V. தினகரன் ஆளுநர் ஆர்லேக்கரைச் சந்தித்துப் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த தகுதிநீக்க மனு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.