கொங்கு மண்டலத்தில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு இப்போதைக்கு கட்சியில் எந்தப் பதவியும் வழங்கப்படாது என்பதை கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கறாராகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நபர்களுக்குப் பதவி வழங்கத் தாம் பரிந்துரை செய்யப்போவதில்லை என்று கூறியுள்ள அவர், தங்களது சிறப்பான செயல்பாடுகள் மூலமாகவே கட்சித் தலைமையின் நன்மதிப்பைப் பெற்று நேரடியாகப் பதவிகளைப் பெற வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளாராம்; இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் கட்சி மாறிய முன்னாள் அதிமுக நிர்வாகிகள் பலரும் கடுமையான அப்செட்டில் இருப்பதாகக் கொங்கு அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
