நீட் வினாத்தாள் கசிவு… தொடரும் மாணவர்கள் போராட்டம்… நாடே பரபரப்பில்… நள்ளிரவில் களமிறங்கிய பிரதமர்… அதிரவைத்த புது சட்டம்… நடுங்கும் அதிகாரிகள்…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கும் செயல் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், கடந்த சில மாதங்களில் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்டக் கடுமையான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் கல்வியாண்டு வீணாகக் கூடாது என்பதற்காகவே அரசு மிகக் குறைந்த காலத்தில் மறுதேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். தேர்வு முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்த போதிலும், அதோடு நின்றுவிடாமல் இந்த பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக, வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கச் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

இதன் தொடர்ச்சியாக, வினாத்தாள் கசிவைத் தடுக்கவும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யவும் புதிய சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. துறை அதிகாரிகளால் நள்ளிரவில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவுத் திட்டம், வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் எனப் பிரதமர் உறுதி அளித்துள்ளார். மேலும், வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.