“தண்ணீர் தர முடியாது… ஆனா பேசுவோம்…” தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த கர்நாடகா… முதல்வர் விஜய்க்கு வந்த ரகசிய கடிதம்… அதிரடி முடிவு… அலறும் அரசியல் களம்…!

By Visaka on ஆடி 24, 2026

Spread the love

கர்நாடக அரசால் காவிரி நீர் உரிய முறையில் திறக்கப்படாததும், மேகதாது அணை தொடர்பான சர்ச்சைகளும் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாகத் தொடரும் மிக முக்கிய சிக்கல்களாக உருவெடுத்துள்ளன. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை வழங்க கர்நாடகா மறுத்து வரும் சூழலில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் எவ்வித சாதகமான முடிவும் எட்டப்படவில்லை.

இந்த அசாதாரணச் சூழலில், காவிரி நதி நீர்ப் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நேரில் விவாதிக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கர்நாடக அரசு சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வறட்சிக் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நீர்ப் பகிர்வு முறைகள் குறித்தும், இரு மாநிலங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குச் சுமூகத் தீர்வு காண்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு வருமாறு அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

   

இருப்பினும், இந்த அழைப்பு குறித்து தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. கர்நாடகாவின் இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பாரா அல்லது காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாகவே சட்டப்பூர்வ உரிமைகளைக் கோருவாரா என்பது தற்போதைய அரசியல் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.