“மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்..” நீட் போராட்டத்திற்கு விராட் கோலி ஆதரவா…? இணையத்தை கலக்கும் செய்தி உண்மைதானா…? சர்ச்சை பதிவு…!!

By Devi Ramu on ஆடி 24, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, நீட் தேர்வுப் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி ஒரு பதிவு இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மாணவர்களுக்கு நியாயமான தேர்வு முறை கிடைக்க வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்தத் தகவல் முற்றிலும் போலியானது என்று உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. கோலியின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகவில்லை; மாறாகக் கோலியின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்திய வேறு ஒரு போலிப் பக்கத்தில் இருந்தே இது பகிரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகாரப்பூர்வமற்ற இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.