டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக நடைபெறும் சி.ஜே.பி அமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வெளியிட்ட நகைச்சுவையான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகப் போராடும் போராட்டக்காரர்களுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், தனது மேனேஜர் விடுமுறை தராததால் உடனடியாக நேரில் வர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DbFW3TMEmBo/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
எனவே, போராட்டத்தை வெள்ளி வரை தொடர்ந்து நடத்துமாறும், வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தானும் தனது அலுவலகப் பணியாளர்களும் வந்து போராட்டத்தில் கலந்துகொள்வதாகவும் அவர் ஜாலியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலைப்பளு மற்றும் லீவு கிடைக்காத விரக்தியைக் கிண்டலாகப் பகிர்ந்த இந்த வீடியோவை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பல தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையோடு இந்த நிலையை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
