“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அப்பெண் மாம்பழங்கள் நிறைந்த பையுடன் பூங்காவிற்குச் சென்று குரங்குகளுக்கு உணவளித்தபோது, அங்கு வந்த அண்டை வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வாக்குவாதத்தின் போது, “இது என்ன உன் அப்பன் வீட்டுப் பூங்காவா?” என்று அண்டை வீட்டார் ஒருவர் கேட்டதற்கு, அப்பெண் தைரியமாகப் பதிலளித்துள்ளார். “மனிதர்கள் குடியிருப்புப் பகுதிகளை உருவாக்குவதற்கு முன்பே குரங்குகள் இந்த வனப் பகுதியில் தான் வாழ்ந்து வந்தன; விலங்குகளின் வாழிடத்தை நாம் தான் ஆக்கிரமித்துள்ளோம்” என்று சுட்டிக்காட்டிய அவர், பசியோடு இருக்கும் விலங்குகளுக்குத் தனது சொந்தச் செலவில் உணவளிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும், மனிதர்களுக்கு விலங்குகள் மீதான இரக்கம் குறைந்துவிட்டது என்றும் வாதிட்டார்.

   

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பயனர்களிடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் அப்பெண்ணின் விலங்கு நேயத்தையும் இரக்க குணத்தையும் பாராட்டி ஆதரவு தெரிவித்து வரும் அதே வேளையில், குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பது குரங்குகளின் அச்சுறுத்தலையும், மனிதர்களுக்கான பாதுகாப்புப் பிரச்சினைகளையும் அதிகரிக்கும் எனப் பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.