“ரூ.5 லட்சம் கொடு.. இல்லைனா பதவியே கிடையாது”…. . N.ஆனந்த் விவகாரத்தில் பரபரப்பு… விஜய்க்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, தற்போது தவெக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மீது புதிய குற்றச்சாட்டைச் சுமத்தி அடுத்தகட்டப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அரசு வழக்கறிஞர் பதவிக்காகத் தன்னிடம் மோகன்ராஜ் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்குத் தான் மறுப்பு தெரிவித்த நிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தப் பதவிகளை வழங்கியதாகவும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்; கட்சித் தலைமை இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளதால், இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.