ஓலைக்குடா அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு வெறும் கடிதப் போக்குவரத்தோடு நின்றுவிடாமல் ஆக்கப்பூர்வமான நிரந்தர தீர்வைக் காண வேண்டும் எனத் தமிழக முதல்வர் விஜய்க்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, தனது அரசியல் பிரசாரங்களின்போது, அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை அரசுக்கு எதிரான மீனவர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருப்பதாக தவெக தலைவர் விஜய் கடுமையாகச் சாடியிருந்தார்.
ஆனால், தற்போது அவரே முதல்வரான பிறகும் மீனவர் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் அதே பழைய முறையையே பின்பற்றி வருவது, அவருக்கும் ஸ்டாலினுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்ற கேள்வியை எழுப்பி அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கச் செய்துள்ளது.
