“இவர் தான் என் தம்பி…” ரூ.4,500க்கு தங்கம் தரோம்…! 200 போலீஸ் குடும்பங்களை ஏமாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்….! விசாரணையில் அம்பலமாகும் பகீர் தகவல்கள்…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

சென்னையில் குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட காவலர்களின் குடும்பத்தினரிடம் ₹20 கோடி வரை மோசடி செய்த வழக்கில், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுமணி என்பவரைத் தனது ‘தம்பி’ எனக் கூறி, ₹4,500 முதலீடு செய்தால் 15 நாட்களில் 1 கிராம் தங்கக் காசு தருவதாகக் காவலர் குடும்பத்தினரை நம்ப வைத்து இவர் பணத்தை வசூலித்துள்ளார். ஆரம்பத்தில் சிலருக்குக் காசுகளை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்தியதால், ஏராளமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

ஆனால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் திட்டமிட்டபடி தங்கத்தைக் கொடுக்க முடியாமல் ஏமாற்றத் தொடங்கினர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகாரளிக்க முயன்றபோதும், ஷீலா மேரி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அதைத் தடுத்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஷீலா மேரியைச் சஸ்பெண்ட் செய்து கைது செய்தனர். நீதிமன்ற அனுமதி பெற்று அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் பல காவல் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.