குண்டுக்கட்டாக தூக்கி வீசிய காவல்துறை…. நள்ளிரவில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்… பதற்றத்தில் தமிழகம்….!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை சி.பி.ஐ அலுவலகம் மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வீரியமிக்க போராட்டங்களில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்து அப்புறப்படுத்தியதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவியது.