2026 ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக் கோப்பையை வழங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடைக்கு வந்திருந்த நிலையில், வெற்றி கொண்டாட்டங்களின் போது ஸ்பெயின் மிகேல் மெரினோ டிரம்ப் போல நடனமாடி காட்டிய நிகழ்வு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பதக்கங்கள் வழங்கி முடித்த பிறகு அதிபர் டிரம்ப் மேடையை விட்டுச் செல்லும்போது, தனது புகழ்பெற்ற நடன அசைவைச் செய்து காட்டியுள்ளார். அதைப் பார்த்த ஸ்பெயின் மிட்ஃபீல்டர் மிகேல் மெரினோ, உடனடியாக டிரம்பின் அந்த ‘டிரம்ப் டான்ஸ் அசைவை அவரைப் போலவே செய்து காட்டி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நகைச்சுவையான மற்றும் சுவாரசியமான தருணம் கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. டிரம்ப் மேடையை விட்டு நகரும்போது மிகேல் மெரினோ செய்த இந்த நடனம், இணையவாசிகளிடையேயும் கால்பந்து ரசிகர்களிடையேயும் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.
