அடச்சீ… கள்ளக்காதலியுடன் ஹோட்டலில் உல்லாசம்… ரூமுக்கே சென்று மனைவியை மீட்ட கணவன்…! ரூ.5,000 லஞ்சம் வாங்கி சிக்கிய SI…? பொள்ளாச்சியில் பகீர் ஆடியோ அவுட்…!!

By Swetha on ஆடி 21, 2026

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்ற எலக்ட்ரீசியன், திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், இருவரும் வெளியூருக்குச் சென்று தங்கியிருந்தபோது, அப்பெண்ணின் கணவர் அவர்களைக் கண்டுபிடித்து மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் அப்பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளான அத்தம்பதியினர் தற்கொலைக்கு முயன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்ததுடன், அவரிடமிருந்து ரூ 5,000 லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் வாங்கிய செய்தி வெளியே கசியவே, அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அப்பணத்தை முகேஷிடம் திருப்பித் தர முயன்றுள்ளனர்.

   

இதையடுத்து தலைமை காவலர் நாகராஜன் முகேஷைத் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியபோது, “பணம் எனக்கு வேண்டாம், இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டால் போதும்; அப்பெண் தான் திருமணம் ஆகவில்லை என்று கூறி என்னிடம் பழகினார்” என முகேஷ் புலம்பும் தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.