“அட பாவமே”… உண்மை காதல் போல… “அவன் இல்லாத உலகத்துல நான் எதுக்கு?”… காதலன் தற்கொலை… காதலி எடுத்த விபரீத முடிவு… ஒரே ஒரு கடிதத்தால் ஸ்தம்பித்த காவல்துறை…!

By Visaka on ஆடி 21, 2026

Spread the love

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர், தனது காதலன் உயிரிழந்த துயரம் தாங்காமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சடலத்தைக் கைப்பற்றிய பாலக்கோடு காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவியின் பாடப் புத்தகத்தில் இருந்த கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், தன்னுடன் படித்த மாணவனைக் காதலித்து வந்ததாகவும், சமீபத்தில் அவன் தற்கொலை செய்துகொண்டதால் தானும் அவனுடனே செல்ல விரும்புவதாகவும் உருக்கமாக எழுதியிருந்தார். காதலன் இறந்த துயரத்தில் மாணவியும் இந்த விபரீத முடிவை எடுத்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.