சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்ததில், அரசு பேருந்து மீது உரசிக் கீழே விழுந்த இருவர் நல்வாய்ப்பாக மயிரிழையில் உயிர்தப்பிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிஸியான சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டம் கண்டுள்ளது. அதே திசையில் அருகில் வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது வாகனம் உரசியவாறே இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர்.
https://twitter.com/News18TamilNadu/status/2079169758512197803/video/1
பேருந்தின் சக்கரங்களுக்கு மிக அருகில் விழுந்தபோதிலும், பேருந்து ஓட்டுநர் உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டு பிரேக் அடித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் இருவருக்கும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியது பெரும் அற்புதமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிர்ச்சி கரமான விபத்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சாலையில் செல்லும்போது போதிய இடைவெளி விட்டு கவனமுடன் வாகனங்களை இயக்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
