ஐயோ பாவம்…! சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது… பாய்ந்த அதிவேக ஆட்டோ மோதி… சம்பவ இடத்திலேயே கொடூர சாவு…!

By Swetha on ஆடி 20, 2026

Spread the love

ஹைதராபாத் கூகட்பள்ளியில் அதிவேகமாக வந்த ஆட்டோரிக்ஷா மோதியதில் 60 வயது முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் ஜூலை 20, திங்கள்கிழமை காலையில் ஹைதர்நகர் பகுதியில் நடந்துள்ளது.

உயிரிழந்த முதியவரின் பெயர் நரசிம்மா எனத் தெரியவந்துள்ளது. இவர் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

   

https://twitter.com/TheSiasatDaily/status/2079133607248155074/video/1

   

பலத்த காயமடைந்த நரசிம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.