விழுப்புரம் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய அவர்கள், தங்களது ராஜினாமா கடிதங்களை அங்கே வைத்து ‘எடப்பாடி ஒழிக’ என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று ராஜினாமா கடிதங்களை அளித்த நிர்வாகிகள், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலக வேண்டும் என்றும் தீவிரமாக வலியுறுத்தினர்.
