“லவ் பண்ணு, இல்லனா ஜெயிலுக்கு போ…” ரிக்‌ஷாக்காரனுக்கு வந்த சோதனை… நடுரோட்டில் குடிபோதை பெண்ணின் அட்ராசிட்டி… அலறித்துடித்து ஓடிய இளைஞர்… ஷாக்கில் பொதுமக்கள்…!

By Visaka on ஆடி 20, 2026

Spread the love

மதுபோதையில் இருந்த இளம் பெண் ஒருவர், முதலில் பேட்டரி ரிக்‌ஷா ஓட்டுநரிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த வாலிபர் பெண்ணின் காதலை ஏற்க மறுத்து, அவரை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஓட்டுநர் தன்னை தவறான முறையில் துன்புறுத்துவதாகக் கூறி சத்தம்போட்டு, சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பெண்ணின் இந்த திடீர் நாடகத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

https://twitter.com/desHi__chora/status/2078829641742385513/photo/1

   

சம்பவ இடத்திற்கு பொதுமக்களும், கூட்டமும் அதிகளவில் கூடத் தொடங்கியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. கூட்ட நெரிசலையும், அங்கு ஏற்பட்ட பதற்றத்தையும் கவனித்த அந்த ரிக்‌ஷா ஓட்டுநர், தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றாலும், நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தவித்தார். இறுதியில், வேறு வழியின்றி அந்த வாலிபர் தனது பேட்டரி ரிக்‌ஷாவை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.