“ஐயோ பாவம்…” 5 தெருநாய்களின் வெறிச்செயல்… தலை கிழிந்து தொங்கிய கொடூரம்… ரத்த வெள்ளத்தில் மிதந்த பிஞ்சு குழந்தை… அரசு மருத்துவமனையில் நெஞ்சை உருக்கும் காட்சி…!

By Visaka on ஆடி 19, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் – யோகேஸ்வரி தம்பதியின் 4 வயது மகன் ஜஸ்வந்த், தெருநாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். அங்கன்வாடி மையம் சென்றுவிட்டு, தனது பெற்றோர் வேலை செய்யும் புஞ்சைதாமரைக்குளம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவன வளாகத்தில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு நுழைந்த ஐந்து தெருநாய்கள் சிறுவனைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகக் கடித்துக் குதறின. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த தொழிலாளர்கள் நாய்களை விரட்டி, ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை மீட்டனர்.

நாய்கள் கடித்ததில் சிறுவனின் தலையின் பின்பகுதியில் தோல் கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டதுடன் முகம், கை மற்றும் உடல் பாகங்களிலும் தீவிரக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனடியாக அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், காயங்களின் வீரியம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குச் சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான். அங்குள்ள அதி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.