பாண்டிச்சேரி ரகசியம் உடைந்தது… “நெஞ்சில் கை வச்சு சொல்ல முடியுமா?”… EPS-ஐ மேடையிலேயே வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்… பரபரப்பில் அரசியல் களம்…!

By Visaka on ஆடி 19, 2026

Spread the love

பாண்டிச்சேரியில் 47 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு முதலமைச்சராகலாம் என எடப்பாடி பழனிச்சாமி பேசினாரா இல்லையா என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில், புதிய தரக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆய்வகத்தை அமைச்சர் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி செய்யாத காரியம் ஒன்றுமில்லை என்றும், இதனை அவர் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை முஸ்லிம் லீக் தலைவர் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அதற்கு இதுவரை எடப்பாடி பழனிச்சாமி முறையான பதில் அளிக்காமல் தற்போது அதனைப் பொய் என்று மறுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுகவிலிருந்து வெளியேறிய அனைவரும் அதற்கான தகுந்த காரணங்களைக் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘`நடந்தாய் வாழி காவேரி’ `திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ள நிலையில், அதற்கான பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஏற்கனவே டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2006-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தது முதல் தவறு என வைகோ கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கு மாற்றுக்கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றும் கூறினார். இறுதியாக, வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பரிசீலித்து உரிய முடிவு எடுப்பார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.