இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த சோதனை…. திடீரென ஆன்மிகப் பாதைக்கு மாறிய முன்னாள் அமைச்சர்… பின்னணியில் இருக்கும் ரகசியம்…. அதிர்ந்த அறிவாலயம்..!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுக சந்தித்த பலத்த வீழ்ச்சி, அந்த மாவட்டத்தின் அரசியல் களத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் திமுக சார்பில் போட்டியிட்ட 8 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் அமைச்சர்களான மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் அனைவரும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினர். இந்தத் தோல்வி ஒருபுறமிருக்க, மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர எழுச்சி திமுகவினருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதனால், அரசியல் சூழல் சற்று தணியும் வரை பொறுத்திருக்கலாம் என்று திமுகவினர் அமைதி காத்து வருகின்றனர்.

தோல்விக்கு பிந்தைய இந்த இக்கட்டான சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி அரசியல் பணிகளில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி, ஆன்மிகத்தில் அதிக நாட்டம் செலுத்தத் தொடங்கியுள்ளார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பாணியைப் பின்பற்றி, அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கும் அவர், வெளிச்சநத்தத்தில் தாம் கட்டிய கோயிலுக்கு காலையும், மாலையும் தவறாமல் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார். திமுக நிர்வாகிகளின் திருமணங்கள் மற்றும் இல்ல விழாக்களில் கூட அவர் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். அரசியலில் தீவிரமாக இருந்தவர், திடீரென ஆன்மிகத்தின் பக்கம் திரும்பியிருப்பது மதுரை உடன்பிறப்புகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

அதேநேரம், மதுரை திமுகவில் உட்கட்சி அரசியலும், அதிகாரப் போட்டியும் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமை மூர்த்தி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மதுரையின் புதிய ‘பவர் சென்டராக’ உருவெடுத்துள்ளார். அண்மையில் கூட அவர் மூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மற்ற மாவட்டங்களில் திமுக ஆலோசனை கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், மதுரையில் திமுக எந்தவொரு அசைவும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. வரும் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது மூர்த்தி மீண்டும் அரசியலில் வேகம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போதைக்கு அவரது ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் தளபதியின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.