நிர்வாக காரணங்களுக்காகத் தமிழக அரசு ஒரே நேரத்தில் 35 டெண்டர்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, உடுமலையில் 30 டெண்டர்களும், கோத்தகிரியில் 3 டெண்டர்களும், செங்கத்தில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக அரசு கொண்டுவந்த திருவான்மியூர் – உத்தண்டி இடையேயான 4 வழிச்சாலைத் திட்டத்திற்கான டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, அந்தத் திட்டமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நிர்வாகக் குறைபாடுகளைக் களைந்து, பணிகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
