சற்றுமுன்: கொத்தாக கைது.. CM விஜய் முரட்டு சம்பவம்…. காலையிலேயே அதிரும் தமிழகம்….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, மாநில காவல்துறை மிகத்தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஒரே வாரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 22,519 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் அதிரடி சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுள் 822 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ள பலரை போலீசார் தங்களது தொடர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுமக்களின், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எவ்வித குந்தகமும் விளைவிக்காத வகையில் காவல்துறை மேற்கொண்டுள்ள இந்தத் தொடர் சங்கிலி நடவடிக்கை, தமிழகத்தில் குற்றங்களை ஒடுக்குவதில் மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.