“முதல் பேத்தி…” பாடகி எஸ்.ஜானகி வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத சோகம்… “இருக்கும் ஒரே ஆறுதல் அதுதான்….” பேத்தி வெளியிட்ட உருக்கமான பதிவு…!!

By Devi Ramu on ஆடி 15, 2026

Spread the love

இசை உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து நாற்பத்தெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய புகழ்பெற்ற பாடகி எஸ். ஜானகி, அளவற்ற சொத்துக்கள் இருந்தபோதிலும் மைசூரில் மிகவும் எளிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா காலமான துயரத்தைத் தாங்க முடியாமல், அந்த வேதனையை மறக்கவே அவர் மைசூருக்குக் குடிபெயர்ந்தார். மருமகள் மற்றும் பேத்தி அப்சராவுடன் வசித்து வந்த ஜானகியின் வாழ்க்கையில், அவரது மகனின் மறைவுக்கு முன்பே மற்றொரு பேரிழப்பு நிகழ்ந்துள்ளதை அவரது பேத்தி அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜானகி அம்மாவுக்கு வர்ஷா, அப்சரா என இரண்டு பேத்திகள் இருந்த நிலையில், அவற்றுள் பாட்டியுடன் அதீத பாசப் பிணைப்பில் இருந்த மூத்த பேத்தி வர்ஷா கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென உயிரிழந்தார். இந்தத் துயரத்திலிருந்து மீளும் முன்பே அடுத்ததாக மகனையும் இழந்த ஜானகி, அடுத்தடுத்த மரணங்களால் பெரும் மனவேதனையில் மூழ்கினார். பாட்டியும் மறைந்த சகோதரியும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அப்சரா, தற்போது வர்ஷாவும் தன் தந்தையும் விண்ணுலகில் ஒன்றாக இணைந்திருப்பதே தங்களுக்கு இப்போதைய ஒரே நிம்மதி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.