“அதை அப்படியே மாத்துங்க…” – அதிகாரிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…. அதிமுக, திமுக திட்டங்களுக்கு ஆப்பு வைக்கும் தவெக அரசு…!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

திமுக அரசின் ‘திராவிட மாடல்’ கோட்பாட்டிற்குப் போட்டியாக, தமிழகத்தில் புதியதொரு அரசியல் மற்றும் நிர்வாகப் பாய்ச்சலை நிகழ்த்தும் நோக்கில் ‘வெற்றி தமிழகம்’ என்ற புதிய கொள்கையை முன்னிலைப்படுத்த தவெக அரசு திட்டமிட்டு வருகிறது. இக்கொள்கையின் கீழ், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில் துறைவாரியான தொலைநோக்குத் திட்டங்களைத் தயாரிக்குமாறு மாநிலத் தலைமைச் செயலாளர் சாய் குமார் அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக, கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விரிவாக மதிப்பாய்வு செய்து, அவற்றிலுள்ள குறைகளைக் களைந்து, தற்போதைய நவீனத் தேவைகளுக்கு ஏற்பப் புதிய மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட திட்டங்களாக அவற்றை வடிவமைக்குமாறு அரசுத் துறைச் செயலாளர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.