திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது உதவியாளரின் (PA) செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மாவட்டத்தில் உள்ள உள்கட்சிப் பிரச்னைகளை முன்னாள் அமைச்சரின் உதவியாளர் முறையாகக் கையாளுவதில்லை என்றும், கட்சிக்கு உழைக்கும் நிர்வாகிகளுக்கு அவர் உரிய மரியாதை அளிப்பதில்லை என்றும் வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய அலட்சியப் போக்கின் காரணமாகவே பலர் கட்சியை விட்டு ஓட்டம் பிடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திமுக தலைமை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுச் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே மாவட்டத்தில் கட்சியைக் காப்பாற்றவும், மேலும் பலப்படுத்தவும் முடியும் என்று பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
