“என் கல்யாணத்துக்கு அம்மா பிளான் பண்ணிட்டாங்க…” விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… மில்லியன் கணக்கில் குவிந்த பார்வைகள்… நெட்டிசன்களை ஏமாற்றிய அந்த ஒரு வீடியோ…!!

By Swetha on ஆடி 15, 2026

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற இளம்பெண், தனது தலையை மொட்டையடித்துக்கொள்ளும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “என் அம்மா என் திருமணத்திற்கு திட்டம் போட்டிருக்கிறார்” என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், பெற்றோர் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதால் அதற்கான எதிர்ப்புப் போராட்டமாகவே அந்தப் பெண் இவ்வாறு மொட்டையடித்துக் கொண்டார் என்று தவறாகப் புரிந்து கொண்டனர். இதனால், இணையத்தில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு எதிராகவும், திருமண வற்புறுத்தலுக்கு எதிராகவும் பல்வேறு வதந்திகள் காட்டுத்தீயாய் பரவத் தொடங்கின.

   

இணையத்தில் வதந்திகள் தீவிரமாகப் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணான கீர்த்தனா தனது யூடியூப் பக்கத்தில் இதற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தான் மொட்டையடித்துக் கொண்ட சம்பவம் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு எதிரான போராட்டம் அல்ல என்றும், மாறாக இது தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நகைச்சுவைக்காக மட்டுமே செய்யப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இதன் மூலம் இணையத்தில் பரவிய வீண் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.