தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், இந்த மாதத்திற்கான உரிமைத் தொகை 1,000 ரூபாய் இன்று (ஜூலை 15) தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது. இதற்கிடையே, இந்த உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், மாநில பட்ஜெட்டுக்கு முன்பாக இந்த நிதி உயர்வை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், இந்த மாதமும் வழக்கம்போல 1,000 ரூபாய் மட்டுமே பயனாளிகளுக்கு வரவு வைக்கப்படும்.
