சென்னையில் நேற்று நள்ளிரவு காலமான சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடலுக்கு, துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், சென்னை மருத்துவமனையில் இருந்து அவரது உடல் தற்போது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அன்னாரின் இலக்கியப் பணிகளையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் இந்தத் தூப்பாக்கி குண்டுகள் முழங்கும் முழு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது.
