தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக புதிய குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
தனது சொந்தத் தொகுதியான பெரம்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தைத் திறந்து வைக்கும் அவர், அதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரம்மாண்ட விழாவில் பொதுமக்களுக்குப் புதிய ரேஷன் அட்டைகளை வழங்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாகத் தமிழகம் முழுவதும் 50,000 புதிய ரேஷன் அட்டைகள் தகுதியான பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
