சர்க்கரை நோய், ரத்த அழுத்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு…! “39 முக்கிய மருந்துகளின் விலை குறைப்பு…” மத்திய அரசின் அதிரடி முடிவு…!!

By Devi Ramu on ஆடி 12, 2026

Spread the love

பொதுமக்களின் மருத்துவச் செலவைக் குறைக்கும் வகையில், நாள்பட்ட வியாதிகளுக்கான 39 அத்தியாவசிய மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையைத் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முறைப்படுத்திப் புதிய உச்சவரம்பை விதித்துள்ளது. இதன்படி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கால்சியம் குறைபாடு மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் மாத்திரைகளின் விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நீரிழிவு நோய்க்கான மாத்திரை ஒன்றின் விலை ₹14.88 ஆகவும், மாரடைப்பு தடுப்பு கேப்ஸ்யூல் ஒன்றின் விலை ₹6.37 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் உயிர்காக்கும் மருந்துகளின் விலைகளும் இந்த வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, வெறிநாய்க்கடி தடுப்புக்கான ரேபிஸ் ஊசி மருந்தின் விலை ₹119.48 ஆகவும், பக்கவாதம் மற்றும் ரத்தக் கட்டிகளைக் கரைக்கப் பயன்படும் அவசரக்கால ‘டெனெக்டெப்லேஸ்’ ஊசியின் விலை ₹60,238.27 ஆகவும் அதிகாரப்பூர்வமாகத் திருத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கை, தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருக்கும் சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதாரப் பகுதி நிம்மதியையும், ஆறுதலையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.