அனிருத் திருமண தேதி பிக்ஸ்… இருவீட்டு பெரியவர்களும் சம்மதிச்சாச்சு… நவம்பர் 2வது வாரத்தில் அனிருத் – காவ்யா மாறன் பிரம்மாண்ட திருமணம்… ஹோலிவூடில் கொண்டாட்டம்…!

By Visaka on ஆடி 12, 2026

Spread the love

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்யவிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் மூத்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் அளித்த பேட்டி ஒன்றில், இருவீட்டு பெரியவர்களின் சம்மதத்துடன் இந்த திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரபல சினிமா விமர்சகர் ‘வலைபேச்சு’ அந்தணன் இந்த ஜோடியின் திருமண தேதி குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருமணத் தேதியை இறுதி செய்வதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் திருமணத்தை நிம்மதியாக நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டுள்ளனர். ரஜினிகாந்த் மற்றும் சன் குடும்பத்தினர் இணைந்து எடுத்துள்ள இந்த முடிவு, தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆரம்பத்தில் தனது திருமணம் குறித்த செய்திகளை அனிருத் மறுத்திருந்தாலும், அடுத்தடுத்து வெளியாகும் இத்தகைய தகவல்களால் இவர்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.