குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்…. இப்படியும் ஒரு தந்தையா?…. தூக்கத்தில் இருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த பயங்கரம்…. வாயில் நுரை தள்ளி கருகிக் கிடந்த 3 உடல்கள்….!

By SATHISH R on ஆடி 12, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுப்பாடு-சவேரியார் புரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மரிய மிக்கேல் என்பவர், குடும்பப் பிரச்னை காரணமாக தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மரிய நிரோஷா என்ற மகளும், ஏழாம் வகுப்பு படித்து வந்த மரிய கெனிஸ்டன் என்ற மகனும் இருந்தனர்.

   

மரிய மிக்கேலின் மனைவி சபிதா ரோனிகம், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மரிய மிக்கேல், தனது லாரி ஓட்டுநர் வேலைக்குச் செல்வதைக் தவிர்த்துவிட்டு, உள்ளூரிலேயே பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்று வந்துள்ளார். மனைவியின் பிரிவால் ஏற்பட்ட மன வேதனை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

   

இந்த விபரீத திட்டத்தின்படி, நேற்று இரவு தனது குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த சிக்கன் ரைஸ் உள்ளிட்ட உணவுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். உணவருந்திய குழந்தைகள் இருவரும் கட்டிலில் நன்கு அயர்ந்து தூங்கிய வேளையில், மரிய மிக்கேல் மின்சார வயர்களைக் கொண்டு தனது இரண்டு குழந்தைகளின் கை, கால்களையும், தனது உடலையும் ஒன்றாகச் சேர்த்து கட்டியுள்ளார். பின்னர், அதில் மின்சாரத்தைப் பாய்த்து மூன்று பேரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

மறுநாள் பிற்பகல் வரை வீட்டின் கதவு திறக்கப்படாமலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், வாயில் நுரை தள்ளியபடி மூன்று பேரும் கருகிக் கிடந்த உடல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.