மனைவி பிரிந்து சென்ற கோபம்…. பெற்ற பிள்ளைகளின் கை, கால்களில் ஒயரைச் சுற்றி மின்சாரம் பாய்ச்சிய …. தூத்துக்குடியில் நடந்த விபரீதம்….!

By SATHISH R on ஆடி 11, 2026

Spread the love

தூத்துக்குடி புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் மரிய மைக்கேல் (45). லாரி ஓட்டுநரான இவருக்குச் சபிதாரோனிகம் என்ற மனைவியும், மரிய நிரோஷா (14) என்ற மகளும், மரிய கெனிஸ்டன் (12) என்ற மகனும் இருந்தனர். குழந்தைகள் இருவரும் முறையே 9 மற்றும் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி சபிதாரோனிகம் கணவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மரிய மைக்கேல் தனது தந்தை அந்தோணிமுத்து மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

   

மனைவி பிரிந்து சென்ற விரக்தியிலும், கடுமையான மனஉளைச்சலிலும் இருந்த மரிய மைக்கேல், தன் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவு, தந்தை வீட்டின் வெளியே படுத்துறங்க, மரிய மைக்கேல் தன் குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கியுள்ளார். நள்ளிரவில் திடீரென எழுந்த அவர், காதுகேளாத உறக்கத்தில் இருந்த மகள் நிரோஷா மற்றும் மகன் கெனிஸ்டன் ஆகியோரின் கை, கால்களில் மின்சார ஒயரைச் சுற்றி மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். இதில் அந்தப் பிஞ்சுகள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

பிள்ளைகள் இறந்ததை உறுதி செய்த பின், மரிய மைக்கேல் தனது காலிலும் மின்சார ஒயரைச் சுற்றிக்கொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த புதுக்கோட்டை காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இக்கோரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினைக்காகப் பெற்ற பிள்ளைகளையே கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.