செந்தில் பாலாஜி வெற்றி.. CM விஜய்க்கு பின்னடைவு…. தவெகவுக்கு விழுந்த பலத்த அடி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஆடி 11, 2026

Spread the love

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து, ஈரோடு மொடக்குறிச்சியைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதை முக்கியக் காரணமாகக் காட்டி வழக்கை நிராகரித்தது. மேலும், தேர்தலில் போட்டியிடாத அல்லது அந்தத் தொகுதிக்குச் சம்மந்தமில்லாத யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் என்ற நிலை உருவானால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் குவிந்துவிடும் என்று சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், இந்தத் தேர்தல் வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.