அடப்பாவி.! “திருமணமாகி 4 மாதமே” கள்ளக்காதலிக்காக மனைவியைக் கொன்று பெண் தோழிக்கு போட்டோ அனுப்பிய கணவர்.. வாஷிங்டனில் அரங்கேறிய கொடூரம்.!!

By Swetha on ஆடி 10, 2026

Spread the love

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள பெல்லிவியூ நகரில், மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த அவினாஷ் நார்னே (30) என்பவர் தனது மனைவி ராஜிதாவை (27) கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான நான்கே மாதங்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என்று அவினாஷ் தரப்பில் கூறப்பட்ட போதிலும், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இது திட்டமிட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய டிஜிட்டல் விசாரணையில், அவினாஷ் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும், சம்பவத்தன்று அவருடன் நீண்ட நேரம் பேசியதும் கண்டறியப்பட்டது. மேலும், ராஜிதாவின் மரணத்திற்குப் பிறகு சில புகைப்படங்களை அந்தப் பெண்ணிற்கு அனுப்பிய ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்களது திருமணத்திலும் அந்தப் பெண் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பதற்கு முன், தனது உடல்நிலை குறித்துத் தனது தோழிகளிடம் பகிர்ந்த செய்திகளும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரிடையே இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.