அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேட்டில் அமைச்சர் ஆனந்தின் பெயரைப் பயன்படுத்தி வழக்கறிஞர்களான லெனின் ஜெயபாலன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக அந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஒருவரும் இதேபோன்று அமைச்சர் மீது புகார் அளித்திருந்த நிலையில், தற்போது திமுகவும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையை நாடியிருப்பது அமைச்சர்களுக்கு எதிரான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
