“என் தாத்தா தான் முக்கியம்”… 12 லட்சத்தை ஒரே நாளில் காலி செய்த 21 வயது இளைஞர்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்… உலகையே உருகவைத்த சம்பவம்…!

By SATHISH R on ஆடி 9, 2026

Spread the love

தற்போதைய காலகட்டத்தில் உறவுகளுக்கு இடையே கொடுக்கப்படும் அன்பும், முக்கியத்துவமும், மரியாதையும் குறைந்துவிட்டது எனப் பலரும் ஆதங்கப்படுகிறார்கள். குறிப்பாக, இன்றைய தலைமுறை இளைஞர்கள் முதியவர்களை மதிப்பதில்லை என்கிற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல, இப்போதும் பெரியவர்கள் மீது அளவற்ற அன்பு காட்டும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களது நாட்டின் போட்டிகளைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான ஜேக்கப், தனது 80 வயது தாத்தாவை உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அழைத்துச் சென்று நேரில் காண்பிக்க ஆசைப்பட்டார்.

   

இதற்காக, தான் சொந்தமாக ஒரு புதிய வீடு வாங்குவதற்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த சுமார் 12 லட்ச ரூபாய் பணத்தை, யோசிக்காமல் கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஜேக்கப் செலவழித்துள்ளார். சிறு வயதில் தனக்காகப் பல தியாகங்களைச் செய்து, அன்போடு வளர்த்த தாத்தாவின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றுவதே தனது முதல் கடமை என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தாத்தாவுடன் உலகக் கோப்பையைக் காண வந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அது காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

   

ஜேக்கப்பின் இந்த அசாத்திய பாசத்தைக் கண்டு வியந்த உலகெங்கிலும் உள்ள இணையவாசிகள் அவரைப் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ‘Melawin’ என்ற தனியார் நிறுவனம், ஜேக்கப்பின் இந்த நெகிழ்ச்சியான செயலால் ஈர்க்கப்பட்டு, அவர் டிக்கெட்டுகளுக்காகச் செலவு செய்த மொத்த தொகையையும் அவருக்கே திருப்பி வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. தாத்தாவின் மீதான பேரனின் உண்மையான அன்பிற்குப் பரிசாக, வீடு வாங்கும் பணமும் திரும்பக் கிடைத்துள்ள இந்தச் சம்பவம் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது.