தமிழக போக்குவரத்துத் துறையில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இறுதி செய்யப்பட்ட ஐந்து முக்கிய டெண்டர்களை, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, அரசுப் பேருந்துகளுக்காக 60 ஆயிரம் டயர்கள் வாங்குவதற்காக விடப்பட்ட பிரம்மாண்ட டெண்டர் இதில் அடங்கும். இந்த டெண்டர் நடைமுறைகளில் முறையான வெளிப்படைத்தன்மை இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள தவெக அரசு, இது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் புதிய டெண்டர்கள் முறைப்படி விடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசின் இந்த அதிரடி அதிரடி நடவடிக்கை, தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘லஞ்சமில்லா நல்லாட்சி’ என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வரும் தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சியில் நடந்த நிர்வாக முறைகேடுகளையும், டெண்டர் புகார்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருவது திமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் புதிய அரசு எடுத்து வரும் இந்த அடுத்தடுத்த டெண்டர் ரத்து நடவடிக்கைகள், தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதலையும், அரசியல் ரீதியான காரசார விவாதங்களையும் தற்பொழுது உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
