மக்களே உஷார்… இப்ப வேணாம்… சட்டென குறைந்த தங்கம் விலை… பதற்றத்தில் மக்கள்… நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கொடுத்த முக்கிய எச்சரிக்கை…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

தங்கம் விலை வீழ்ச்சியடைந்து விடுமோ என்ற பீதியில் இந்திய குடும்பங்கள் சுமார் 50 டன் தங்கத்தை விற்றுப் பணமாக்கியதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அது குறித்த உண்மைத் தன்மையை பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். ‘மணிப்பேச்சு’ யூடியூப் சேனலில் இதுபற்றிப் பேசிய அவர், மக்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் தங்கத்தை விற்கவில்லை என்றும்; மணப்புரம், முத்தூட், கொசமட்டம் போன்ற நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கம், வட்டி மற்றும் அசல் தொகையைக் கட்ட முடியாத காரணத்தால் ஏலத்திற்கு (Auction) வந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் வட்டி விகித மாற்றங்களின் அடிப்படையிலேயே சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவதால், தற்காலிக விலை வீழ்ச்சியைக் கண்டு முதலீட்டாளர்கள் பதற்றமடையத் தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய தங்கம் விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, சந்தையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை தற்காலிகமாக இறங்கி பின் ஏறும் என்றும், வட்டி விகிதத்தைக் குறைத்தால் விலை நேரடியாகவே உயர்ந்துவிடும் என்றும் குறிப்பிட்ட ஆனந்த் சீனிவாசன், தங்கம் வாங்குவதற்கு இது ஒரு நல்ல தருணம் என்றும், விலை குறையும் போது இன்னும் கொஞ்சம் வாங்கிப் போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஜூலை 3-ஆம் தேதி வரை உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று கிராமுக்கு ரூ. 153 குறைந்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 13,560 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.