ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சீனியர்களை இந்த குழுவில் சேர்க்கக் கூடாது என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே இளம் தலைமுறையினருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவலாய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இளம் நிர்வாகிகள் கட்சி நிர்வாகத்தை ஆராய்ந்து ஸ்டாலினிடம் அளிக்கவுள்ள விரிவான அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்த சீனியர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயக்கூடும் என்ற அச்சம் தற்போது திமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் தீவிரமாகப் புகைந்து வருகிறது.