FLASH NEWS: ஜிவி பிரகாஷுக்கு விழுந்த அடி… இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான “ஹேப்பி ராஜ்” திரைப்படத்தில், 1980-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முரட்டுக் காளை’ படத்தின் புகழ்பெற்ற “பொதுவாக என் மனசு தங்கம்” என்ற பாடல் உருமாற்றி பயன்படுத்தப்பட்டிருந்தது. தனது அனுமதியின்றி இந்த பாடலை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, ஜி.வி.பிரகாஷ் அந்தப் பாடலைப் பயன்படுத்த தடை விதித்ததோடு, அனுமதியின்றி பாடலை உருமாற்றிப் பயன்படுத்தியது குறித்து விளக்கமளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

   

இளையராஜாவின் பாடல்களை எக்கோ, சோனி போன்ற இசை நிறுவனங்கள் மூலம் தயாரிப்பாளர்கள் முறைப்படி பெற்றிருந்தாலும், அந்தப் பாடல்களின் மெட்டுகளுக்கான அசல் இசை உரிமை (Melody Rights) இளையராஜாவிடமே உள்ளது என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, ‘டியூட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “கருத்த மச்சான்”, “100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்” ஆகிய பாடல்களுக்கும், அஜித் நடிப்பில் உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்களுக்கும் இளையராஜா தொடர்ந்த வழக்கின் மூலமாக நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னிடம் முன் அனுமதி பெற்று பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறும் இளையராஜா, அனுமதியின்றி பாடல்களை மறு உருவாக்கம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சமரசமின்றி காப்புரிமை யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.