அதிமுகவில் இருந்து இன்னும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலங்களில் திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) ரகசிய முயற்சி மேற்கொண்டது முற்றிலும் உண்மை என்றும், அதன் காரணமாகவே அதிருப்தியடைந்த அக்கட்சியினர் தற்போது தொடர்ச்சியாக டிவிேகவை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள சூழலில், இந்த ராஜினாமா படலமும், கட்சி தாவல்களும் வரும் நாட்களில் மேலும் நீடிக்கும் என்பதையே அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
