ஷாக் …125 நாட்கள் ரகசிய பெட்டகம்… சிதையாத உடல்…! கமேனியின் இறுதி நிகழ்வில்… உலகை உலுக்கிய அதிநவீன எம்பாமிங் ரகசியம்…!!

By Swetha on ஆடி 6, 2026

Spread the love

அயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, 125 நாட்கள் கடந்தும் அவரது உடல் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட விவகாரம் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நிலவிய கடுமையான போர்ச்சூழல் காரணமாக இறுதிச் சடங்குகளை உடனடியாக நடத்த முடியாமல் போனது. இதன் விளைவாக, டெஹ்ரானின் அதிநவீன நிலத்தடி மருத்துவ வசதிகளுக்குள், நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய எம்பாமிங் தொழில்நுட்பங்கள் இணைந்து அவரது உடலை மிக ரகசியமாகப் பாதுகாக்கும் பணிகள் அரங்கேறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அதிசயப் பாதுகாப்பு நடைமுறையின் கீழ், உடலின் இயற்கையான திரவங்கள் முழுமையாக நீக்கப்பட்டு, திசுக்கள் அழுகுவதைத் தடுக்கும் ஃபார்மால்டிஹைட், கிளிசரின் மற்றும் ஆல்கஹால் கலந்த சிறப்புத் திரவம் தமனிகள் வழியாகச் செலுத்தப்பட்டுள்ளது. பின்னர், பாக்டீரியாக்கள் மற்றும் ஈரப்பதத்தின் தாக்கம் அற்ற, முற்றிலும் காற்று புகாத பிரத்யேகப் பெட்டகத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், உடலின் தோல் சுருங்காமல் அப்படியே இருப்பதற்காக மெழுகு மற்றும் சிலிகான் அடிப்படையிலான பராமரிப்பு முறைகளைக் கொண்டு வாரந்தோறும் மருத்துவ நிபுணர்கள் குழு தீவிரமாகக் கண்காணித்து வந்ததாலேயே, இத்தனை நாட்கள் கடந்தும் உடல் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

   

உலக வரலாற்றில் அரசியல் தலைவர்களின் உடல்களை இவ்வாறு பாதுகாப்பது புதிய ஒன்றல்ல; சோவியத் ஒன்றியத்தின் விளாடிமிர் லெனின், வியட்நாமின் ஹோ சி மின் மற்றும் வடகொரியாவின் கிம் இல் சுங் ஆகியோரின் உடல்கள் இன்றளவும் பல தசாப்தங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருவது இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். ஈரானின் சொந்த வரலாற்றிலேயே கூட, அதன் முன்னாள் மன்னரான ரிசா ஷா பஹ்லவியின் உடல் இதேபோன்ற எம்பாமிங் முறையில் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. தற்போதைய பதற்றமான சூழலில், ஈரானின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைவரின் உடல் நவீன அறிவியலின் துணையோடு 125 நாட்கள் சிதையாமல் காப்பற்றப்பட்டுள்ளது உலக வரலாற்றின் மற்றுமொரு முக்கியப் பதிவாக மாறியுள்ளது.