“யார் சாமி நீ… தன் மனைவிக்காக.. 20 நாளில் ‘சொந்தமாக’ எஸ்கலேட்டர் செய்த படிக்காத மேதை…! தாஜ்மகாலை மிஞ்சிய ஒரு விவசாயியின் காதல் கதை..!”

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே சாட்சி. ஒரு செயலைச் செய்வதற்கான தேவையும், அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற தீவிர மன உறுதியும் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். பொறியியல் படிப்போ அல்லது முறையான தொழில்நுட்ப பயிற்சியோ இல்லாத ஒருவர், தன் மனைவியின் துயர் துடைக்க எண்ணிய மாத்திரத்தில் இத்தகையதொரு சாதனையைப் படைத்துள்ளார்.

தன் மனைவி மும்தாஜ் மீதான காதலால் மன்னன் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினான். ஆனால், இந்த சாதாரண மனிதரோ தொழில்நுட்பங்களின் மீது கொண்ட ஆர்வத்தால் தன் மனைவிக்காக முற்றிலும் மாறுபட்ட ஒன்றை உருவாக்கியுள்ளார். அவரது மனைவிக்கு ஏற்பட்ட கடுமையான மூட்டு வலி காரணமாக, வீட்டின் படிக்கட்டுகளில் கூட ஏற முடியாமல் அவதிப்பட்டுள்ளார். தன் மனைவியின் இந்த நிலையை கண்டு வருந்திய அவர், அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கினார்.

   

முறையான பயிற்சி இல்லாவிட்டாலும், தொடர் முயற்சியால் வெறும் 20 நாட்களில் ஒரு புதிய எஸ்கலேட்டரை (நகரும் படிக்கட்டு) அவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த எஸ்கலேட்டர் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது மனைவி, வீட்டின் மாடியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக சிரமப்படாமல், இவர் தயாரித்துக் கொடுத்த 2 படிக்கட்டுகளைக் கொண்ட இந்த எஸ்கலேட்டர் வழியாக எளிதாக ஏறி இறங்கி வருகிறார்.