“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு பரப்பும் வகையில் பேசியதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் அவர் வகிக்கும் உன்னதமான அமைச்சர் பதவிக்கு சற்றும் அழகல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசியல் மாண்புகளைக் குலைக்கும் வகையில், முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புவது அநாகரிகமானது என்றும், இத்தகைய செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.