“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத் தொடர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திராவிடக் கட்சிகளுக்குள் இருக்கும் திரைமறைவுப் புரிந்துணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் சமரசமின்றி உறுதியாக உள்ளார். இந்த அதிரடிப் பட்டியலில் செந்தில் பாலாஜி, ஏ.வ.வேலு, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு போன்ற முக்கியப் புள்ளிகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடிச் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.வ.வேலுவைத் தொடர்ந்து அடுத்ததாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை குறிவைத்துத் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்த முழு வீச்சில் ஆயத்தமாகி இருந்தது. ஆனால், இந்த அதி ரகசியத் திட்டம் எப்படியோ சேகர்பாபுவின் கவனத்திற்கு முன்கூட்டியே சென்றதால், அவர் தனக்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களை அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாகவும், மொபைல் போனில் இருந்த முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களையும் நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசுத் துறையின் மிக ரகசியத் தகவல் எப்படிக் கசிந்தது என்றும், லஞ்ச ஒழிப்புத்துறைக்குள்ளேயே இருக்கும் திமுக ஆதரவு ‘ஸ்லீப்பர் செல்’ யார் என்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் தற்பொழுது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

   

திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் சோதனை நடத்தினால், முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்காமல் வெறும் கையோடு திரும்ப நேரிடலாம் என்பதால் தற்காலிகமாக அந்தச் சோதனை கைவிடப்பட்டுள்ளது. அவ்வாறு சோதனை தோல்வியில் முடிந்தால், தவெக அரசு பழிவாங்கல் அரசியலில் ஈடுபட்டுத் தோற்றுவிட்டது என திமுக தரப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் என்பதால் அரசுத் தரப்பு இந்த உத்தியைக் கையாண்டுள்ளது. தற்போது, ஆவணங்கள் மாற்றப்பட்ட புதிய இடங்களைக் கண்டறியும் ரகசியப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், தகவல் கசியாமல் மிகத் துல்லியமாக அடுத்த கட்ட அதிரடிச் சோதனையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை அரங்கேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.