அதிமுகவிற்கு அடுத்த ஷாக்… தவெக-வில் ஐக்கியமாகும் சி.வி.சண்முகம்… திண்டிவனத்தில் நள்ளிரவு பரபரப்பு… சற்றுமுன் அவசர ஆலோசனை…!

By SATHISH R on ஆடி 3, 2026

Spread the love

அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற முன்னணி அதிமுக தலைவர்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்ட சூழலில், தானும் அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெக போன்ற மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்துத் தனது ஆதரவாளர்களின் கருத்துக்களைச் சண்முகம் கேட்டறிந்து வருவதாகத் தெரிகிறது.

இந்த பரபரப்பான அரசியல் ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே, அவரது இல்லத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டிய காரில் நான்கு பேர் திடீரென வருகை தந்துள்ள சம்பவம், சி.வி.சண்முகம் தவெகவில் ஐக்கியமாகப் போகிறாரா என்ற அரசியல் விவாதத்தையும், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.